• City & RTO
  • Car Brand
  • Car Model
  • Car Fuel Type
  • Car Variant
  • Registration Year
பதிவு எண்ணின் மூலம் வாகன விவரங்களை சரிபார்க்கவும்
செயலாக்கம்
    Other models
    Other variants
    Select your variant
    View all variants
      Secure
      We don’t spam
      விவரங்களைச் சரிபார்க்கவும்
      Please wait..
      By clicking on “விவரங்களைச் சரிபார்க்கவும்”, you agree to our Privacy Policy & Terms of Use
      Get Updates on WhatsApp
      Select Make
      Select Model
      Fuel Type
      Select variant
      Registration year
      Registration month
      Save & update
      Please wait..
      Search with another car number?

      We have found best plans for you!! Our advisor will get in touch with you soon.

      Please wait ...

      வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO)

      வட்டாரப் போக்குவரத்து அலுவலகமானது, 1988 ஆம் ஆண்டின் இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி செயல்படுகிறது. வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், மறுபதிவு, பதிவுச் சான்றிதழைப் புதுப்பித்தல் முதல், வரிகள் மற்றும் கட்டணங்களைச் செலுத்துவது வரை, வாகனம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் RTO செய்கிறது.

      Read more

      RTO-வின் முக்கிய பணிகள்

      வட்டாரப் போக்குவரத்து அலுவலகமானது, 1988 ஆம் ஆண்டின் இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி செயல்படுகிறது. வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், மறுபதிவு, பதிவுச் சான்றிதழைப் புதுப்பித்தல் முதல், வரிகள் மற்றும் கட்டணங்களைச் செலுத்துவது வரை, வாகனம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் RTO செய்கிறது.

      இந்தியாவில் உள்ள RTO-க்கள் அனைத்திலும் மேற்கொள்ளப்படும் பணிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

      • வரி வசூலித்தல் : இந்திய சாலைகளில் இயங்கும் பல்வேறு வகையான வாகனங்கள் மீது விதிக்கப்படும் அனைத்து சாலை வரிகளையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமே வசூலிக்கிறது. சாலை வரிகளை வசூலிப்பதைத் தவிர, பல்பயனுள்ள வாகனங்களிடமிருந்து IMV கட்டணங்களையும் RTO வசூலிக்கிறது.
      • சாலைப் பாதுகாப்பை உறுதி செய்தல் : RTO, சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்துப் போக்குவரத்து விதிகளையும் அனைத்து வாகனங்களும் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதையும் இது சரிபார்க்கிறது. கட்டாய மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸைக் கொண்டுள்ள அனைத்து வாகனங்களின் பதிவையும் இது பராமரிக்கிறது.
      • வாகனப் பதிவு : மோட்டார் வாகன விதிகளின்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாகனமும் அந்தந்த மாநில RTO-க்களில் இருந்து நிரந்தரப் பதிவு எண்ணைப் பெறுவது கட்டாயமாகும். அதன்படி, RTO அனைத்து வகையான வாகனங்களுக்கும் தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் பணிகளையும் மேற்கொள்கிறது. மேலும், ஒரு காரின் RC காலாவதியாகப் போகும்போது அதைப் புதுப்பிக்கவும் செய்கிறது.
      • ஓட்டுநர் உரிமம் வழங்குதல் : இந்தியாவில் வாகனம் ஓட்டுவதற்கு செல்லுபடியாகக்கூடிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது ஒரு கட்டாயத் தேவையாகும். உரிமம் இல்லாமல் பிடிபட்டால், நீங்கள் பெரும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணியையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மேற்கொள்கிறது.
      • வாகனங்களை ஆய்வு செய்தல் : RC-ஐப் புதுப்பிக்கும்போதும், தகுதிச் சான்றிதழ் வழங்கும்போதும், வாகனங்களின் புகை வெளியேற்ற அளவு, சாலை தகுதி போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியையும் RTO மேற்கொள்கிறது. அனைத்து வாகனங்களும் MV சட்டத்தால் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை அது உறுதி செய்கிறது.
      • மாசு பரிசோதனைகளை நடத்துதல் : இந்திய சாலைகளில் இயங்கும் அனைத்து வாகனங்களும் தகுதியானவையாக இருப்பதையும், வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்வதற்காக, மாசு பரிசோதனைகளை நடத்தி, வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழையும் RTO வழங்குகிறது.

      தற்காலிக வாகனப் பதிவு பற்றி

      மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் 43-வது பிரிவில் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, வாகனத்தை மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால் மட்டுமே தற்காலிகப் பதிவுச் சான்றிதழ் அனுமதிக்கப்படுகிறது. மேலும், வாகனம் புத்தம் புதியதாக இருந்து, நிரந்தரமாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கும்போது, ​​அதனை விற்ற டீலராலேயே இந்த எண் வழங்கப்படுகிறது.

      பொதுவாக, ஒரு தற்காலிக RC ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும். அந்தக் காலத்திற்குள், உங்கள் நகரம்/மாநிலத்தின் RTO-வில் உங்கள் வாகனத்தை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்வது அவசியம்.

      நிரந்தர வாகனப் பதிவு பற்றி

      நிரந்தரப் பதிவு எண் என்பது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் RTO மூலம் வழங்கப்படும் ஒரு நிரந்தர அடையாள எண் ஆகும். ஒரு வாகனத்திற்கு நிரந்தரப் பதிவு எண் இருந்தால் மட்டுமே அதை இந்தியாவில் ஓட்ட முடியும்.

      • வாகன உரிமையாளர், வாகனத்தை டெலிவரி எடுத்த 7 நாட்களுக்குள் நிரந்தர RC-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
      • மேலும், ஒரு நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் 15 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும், அதன் பிறகு அதனை சம்பந்தப்பட்ட RTO-வில் புதுப்பிக்க வேண்டும்.

      இந்தியாவில் உள்ள RTO படிவங்களின் வகைகள்

      சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணையதளத்தில், RTO தொடர்பான எந்தவொரு பணிக்கும் நீங்கள் எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய பல RTO படிவங்கள் உள்ளன. அந்தப் படிவங்களில் சிலவற்றின் சுருக்கமான கண்ணோட்டம் இதோ-

      படிவ எண். விளக்கம்
      படிவம் 3 லெர்னர்ஸ் லைசென்ஸ்
      படிவம் 20 மோட்டார் வாகனப் பதிவுக்கான விண்ணப்பம்
      படிவம் 20B தற்காலிகப் பதிவுக் காலத்தை நீட்டிப்பதற்கான விண்ணப்பம்
      படிவம் 21 விற்பனைச் சான்றிதழ்
      படிவம் 22 சாலைத் தகுதிச் சான்றிதழ்
      படிவம் 23 B தற்காலிக பதிவு சான்றிதழ்
      படிவம் 25 பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம்
      படிவம் 26 பதிவுச் சான்றிதழின் நகலை வழங்குவதற்கான விண்ணப்பம்
      படிவம் 29 மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு
      படிவம் 31 வாகன உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பம்
      படிவம் 32 பொது ஏலத்தின் போது உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பம்
      படிவம் 24 மோட்டார் வாகனப் பதிவு
      படிவம் 38 A ஆய்வு அறிக்கை
      படிவம் 51 இன்சூரன்ஸ் சான்றிதழ்
      படிவம் 50 பில் ஆஃப் லேடிங்
      படிவம் 57 வெளிநாட்டு இன்சூரன்ஸுக்கான சான்றிதழ்
      படிவம் 54 விபத்து தகவல் அறிக்கை

      இந்தியாவில் RTO கட்டணங்கள் மற்றும் செலவுகள்

      இந்தியாவில் உள்ள RTO கட்டணங்கள் மற்றும் செலவுகளைக் குறிப்பிடும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

      நோக்கம் வசூலிக்கப்படும் கட்டணம்
      RC வழங்குதல் அல்லது புதுப்பித்தல் ரூ. 50 - ரூ. 3,000
      அடமானக் கட்டணங்கள் ரூ. 1500
      நம்பர் பிளேட் ரூ. 250 - ரூ. 400
      தற்காலிக பதிவு ரூ. 1500 முதல் ரூ. 2500 வரை
      உரிமை மாற்றம் ரூ. 300 - ரூ. 3,000
      நகல் RC ரூ. 25 - ரூ. 1500

      வாகனப் பதிவு விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

      • இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH), இந்தியாவில் வாகனப் பதிவிற்காக ‘VAHAN’ போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
      • வாகனப் பதிவு, வாகன உரிமை மாற்றம், பர்மிட் ரினீவல், தகுதிச் சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு நீங்கள் இந்த இணையதளத்தை அணுகலாம்.
      • பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பரிவாஹன் போர்ட்டலில் இருந்து RTO இணையதளத்தில் உங்கள் வாகனத் தகவல்/பதிவு விவரங்களை நீங்கள் எளிதாகச் சரிபார்க்கலாம்:
      • அதிகாரப்பூர்வ பரிவாஹன் போர்ட்டல் இணையதளத்துக்குச் செல்லவும்
      • ‘தகவல் சேவைகள்’ என்பதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, ‘உங்கள் வாகன விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
      • உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும் அல்லது ஒரு கணக்கை உருவாக்கவும்.
      • OTP மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்
      • உங்கள் வாகனத்தின் அனைத்துப் பதிவு விவரங்களையும் பெற, ‘விவரங்களைப் பெறுக’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

      RTO பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

      RTO என்பது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சுருக்கமாகும். இது ஒரு அரசுக்குச் சொந்தமான அமைப்பாகும், இது இந்தியச் சாலைகளில் இயங்கும் அனைத்து வாகனங்களையும் நிர்வகிப்பதற்கும் அவற்றின் பதிவேடுகளைப் பராமரிப்பதற்கும் பொறுப்பாகும்.

      மோட்டார் வாகனச் சட்டத்தின்படியான விதிமுறைகளையும், மத்திய மற்றும் மாநில அரசு விதிகளையும் அமல்படுத்துவதே RTO-வின் முக்கியப் பணியாகும். ஒவ்வொரு வாகனமும் அருகிலுள்ள RTO அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், மோட்டார் இன்சூரன்ஸை ஆய்வு செய்தல், ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல் மற்றும் வழங்குதல், மாசுச் சான்றிதழ்கள் மற்றும் அதுபோன்ற பிறவற்றிற்கும் RTO அலுவலகமே பொறுப்பாகும்.

      1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் 39 ஆம் பிரிவின்படி, ஒரு வாகனம் சம்பந்தப்பட்ட மாநில RTO-வில் பதிவு செய்யப்பட்ட பின்னரே அதை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.

      ஆம், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவாஹன் போர்ட்டலில் இதை ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.

      ஆம், எளிதாக அடையாளம் காண்பதற்காக குஜராத்-GJ, ஹரியானா-HR என்பது போன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட RTO குறியீடு உள்ளது. இந்த RTO குறியீடுகளின் அடிப்படையில்தான் பதிவு எண் ஒதுக்கப்படுகிறது.

      ஆம், டாமன் மற்றும் டையூவிற்கு DD, புதுச்சேரிக்கு PY என்பது போன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு யூனியன் பிரதேசத்தையும் எளிதாக அடையாளம் காண்பதற்காக ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட RTO குறியீடு உள்ளது.

      ஆம், ஒரு வாகனத்தின் உரிமையை ஆன்லைனில் மாற்றுவதற்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

      • ஆன்லைனில் பரிவாஹன் சேவா போர்ட்டலுக்குச் செல்லவும்
      • பிறகு, ‘ஆன்லைன் சேவைகள்’ என்பதன் கீழ்தோன்றும் மெனுவுக்குச் சென்று, உரிமை மாற்றம் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
      • புதிய உரிமையாளரின் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
      • இப்போது பின்வருவனவற்றிலிருந்து ஏதேனும் ஒரு நோக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும் – திருட்டு / விற்பனை / வாரிசுரிமை / ஏலம்.
      • உரிமையாளரின் பெயர், வரிசை எண், உரிமையாளர் வகை, தந்தை/கணவரின் பெயர், விற்பனைத் தேதி (படிவம் 29-இல் உள்ளபடி) மற்றும் விற்பனைத் தொகை ஆகியவற்றை உள்ளிடவும்.
      • ஃபைனான்சியரின் பெயரில் இருந்தால், FRC எனக் குறிக்கவும்.
      • உங்கள் (தற்போதைய/நிரந்தர) முகவரி விவரங்களை சமர்ப்பிக்கவும்.
      Disclaimer: The list mentioned is according to the alphabetical order of the insurance companies. Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by any insurer. This list of plans listed here comprise of insurance products offered by all the insurance partners of Policybazaar. For complete list of insurers in India refer to the Insurance Regulatory and Development Authority of India website www.irdai.gov.in
      Disclaimer: The list mentioned is according to the alphabetical order of the insurance companies. Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by any insurer. This list of plans listed here comprise of insurance products offered by all the insurance partners of Policybazaar. For complete list of insurers in India refer to the Insurance Regulatory and Development Authority of India website www.irdai.gov.in

      #Rs 2094/- per annum is the price for third-party motor insurance for private cars (non-commercial) of not more than 1000cc

      *Savings are based on the comparison between the highest and the lowest premium for own damage cover (excluding add-on covers) provided by different insurance companies for the same vehicle with the same IDV and same NCB. Actual time for transaction may vary subject to additional data requirements and operational processes.

      +Savings are based on the maximum discount on own damage premium as offered by our insurer partners.

      ^Lowest Price Guaranteed is based on certifications shared by insurers with us. Policybazaar will facilitate price matching subject to the terms and conditions of select insurers.

      ##Claim Assurance Program: Pick-up and drop facility available in 1400+ select network garages. On-ground workshop team available in select workshops. Repair warranty on parts at the sole discretion of insurance companies. Dedicated Claims Manager. 24x7 Claim Assistance.

      Close
      Download the Policybazaar app
      to manage all your insurance needs.
      INSTALL